_18494 (1)

தனுஷ், அனிருத் இருவரும் இணைந்த படங்களும், சிவகார்த்திகேயன், அனிருத் இருவரும் இணைந்த படங்களும் அனிருத்திற்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தது. அவர்களுக்கு அடுத்து விஜய்யுடன் இணைந்த ‘கத்தி’, அஜித்துடன் இணைந்த ‘வேதாளம்’ ஆகிய படங்கள் அனிருத்தை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது.தனுஷ், திடீரென அனிருத்தைக் கழட்டி விட்டு, ‘மியூசிக் ஜீனியஸ்’ என அழைத்து ஷான் ரோல்டனுடன் கூட்டணி சேர்ந்து கொண்டார்.

சிவகார்த்திகேயன் முடிந்தவரை அனிருத்துடன் தொடர்கிறார்.2016ம் ஆண்டில் அனிருத் இசையமைத்த ‘ரெமோ’ மட்டுமே வெளியானது. 2017ல் ‘ரம்’ படம் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. 2015ல் ‘மாரி, நானும் ரௌடிதான், வேதாளம், தங்கமகன்’ என நான்கு படங்களுக்கு மட்டுமே இசையமைத்தாலும் அந்த ஆண்டில் தன் இசையாலும், பாடல்களாலும் பரபரப்பாகப் பேசப்பட்டார் அனிருத்.ஆனால், 2016ம் ஆண்டில் அனிருத் அலை சற்றே ஓய்ந்தது. 2017ம் ஆண்டில் நேற்று தான் மீண்டும் அனிருத்தின் அலை வீச ஆரம்பித்துள்ளது.

‘விவேகம்’ படத்தின் சிங்கிள் பாடலான ‘சர்வைவா…’ பாடலின் 25 வினாடிகளை நேற்று வெளியிட்டார்கள். 24 மணி நேரத்திற்குள் யு டியூபில் 10 லட்சம் பார்வைகளைக் கடந்த அந்தப் பாடல் டீசர், மீண்டும் அனிருத் அலையை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்துள்ளது. ‘விவேகம்’ படம் வெளிவரும் போது மீண்டும் அனிருத் பரபரப்பாகப் பேசப்படுவார் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Comments

comments