_18494 (1)

பரதேசி, தங்கமீன்கள், குற்றம் கடிதல் போன்ற படங்களை தயாரித்து பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்பரேஷன் தற்போது தயாரித்துள்ள படம் ‘அண்டாவ காணோம்’. புதுமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘திமிரு’ படத்திற்கு பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் ஸ்ரேயா ரெட்டி கதையின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் இயக்குனர் ராம், இயக்குனர் பாலாஜி தரணீதரன், இயக்குனர் பிரம்மா, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். ‘இந்த படத்தின் கதை ஒரு அண்டாவை சுற்றியே நடைபெறும். மேலும் ஒரு கிராமம் அங்கு நடக்கும் பிரச்சனைகள் பற்றி யதார்த்தமாக பேசும் இப்படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் நாங்கள் படப்பிடிப்பு நடத்திய கிராமத்தின் மக்களே’ என இயக்குனர் வேல்மதி கூறினார். பங்கேற்ற அனைத்து இயக்குனர்களும் தயாரிப்பாளரோடு தாங்கள் பயணித்ததை பற்றி பகிர்ந்துகொண்டனர். இறுதியில் படத்தின் இசையை அனைவரும் இணைந்து வெளியிட்டனர். படத்தில் வரும் அண்டாவிற்கு விஜய்சேதுபதி குரல் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments