atlee-740x431

அட்லீ என்றால் அகராதியில் என்ன அர்த்தமோ தெரியாது.

ஆனால் இயக்குநர் அட்லீயின் செயல்களை வைத்துப் பார்க்கும்போது, அட்லீ என்றால் மற்றவர்களின் அறிவை அபகரிப்பவன் என்று அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது.

mersal_3-1024x503

ஷங்கரின் உதவியாளர், விஜய் டிவி மகேந்திரனின் உறவுக்காரர் என்ற இரண்டு விசிட்டிங்கார்டுகளை வைத்துக்கொண்டு இயக்குநர் வாய்ப்பைப் பெற்ற அட்லீயின் முதல் படம் ராஜா ராணி.

ராஜா ராணி என்ற தலைப்பு கூட அவர் சுயமாக சிந்தித்தது இல்லை. ராமனாதன் தயாரிப்பில், மலையாள இயக்குநர் ஜோஷி இயக்கத்தில், சத்யராஜ், விஜயசாந்தி நடிக்க, சில நாள் படப்பிடிப்போடு முடங்கிப்போன படத்துக்கு சூட்டப்பட்ட தலைப்புதான்.

mersal_1

அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தின் கதை, மணிரத்னம் இயக்கிய மௌனராகம் படத்திலிருந்து களவாடப்பட்டது.

அவரது அடுத்தப் படமான தெறி, விஜய்காந்த் நடித்த சத்ரியன் படத்தின் அப்பட்டமான தழுவல்.

தற்போது விஜய்யை வைத்து இயக்கி வரும் மெர்சல் நிச்சயமாக அட்லீயின் சொந்த சரக்காக இருக்க வாய்ப்பில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, மெர்சல் என்ற தலைப்பு கூட அவரது மண்டையில் உதித்தது அல்ல என்பதுதான் அதிர்ச்சி.

mersal_2

இரண்டு வருடங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டு யுடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு குறும்படத்துக்கு சூட்டப்பட்ட தலைப்புதான் – மெர்சல்.

ஒரு வருடத்துக்கு முன் உருவாக்கப்பட்ட மற்றொரு குறும்படமும் மெர்சல் என்ற பெயரில் யுடியூபில் இருக்கிறது.

mersalsultan-poster-1024x683

இது ஒரு பக்கம் இருக்க, நேற்று வெளியிடப்பட்ட மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் கூட ஒரிஜினாலிட்டி இல்லை. சல்மான்கான் நடித்த சுல்தான் போஸ்டரை நகலெடுத்து வடிவமைத்திருக்கிறார்கள்.

10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் அட்லீ, சொந்தமாக மூளையை கசக்கி யோசிக்காமல் அடுத்தவர்களின் அறிவைத் திருடுவது ஆரோக்கியமான விஷயமில்லை.

Comments

comments