0

தல அஜித் நடித்து வந்த ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு 97% ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடந்ததாகவும் சென்னையில் வெறும் 3 சதவீதமே படப்பிடிப்பு நடந்ததாகவும் சமீபத்தில் இயக்குனர் சிவா பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில்தான் நடந்தது. இதுவரை தமிழ் சினிமா காணாத அழகிய லொகேஷனில் இந்த படத்டின் படப்பிடிப்பு நடந்ததாக வெளிவந்த செய்தி கோலிவுட் திரையுலகில் பரவியதை அடுத்து பல இயக்குனர்கள் பெல்ஜியம் சென்று படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு பெல்ஜியத்தில் நடைபெறுகிறது. அஜித் படத்தின் படப்பிடிப்பு பெல்ஜியத்தில் முடிந்த சில மாதங்களில் அதே நாட்டில் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு படங்களை அடுத்து இன்னும் ஒருசில தமிழ்ப்படத்தின் படப்பிடிப்பு பெல்ஜியத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

comments