லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள ‘சண்டக்கோழி 2′ ஜுலையில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. லரலெட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சண்டக்கோழி’. 2005ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் 2ம் பாகம் மூலமாக மீண்டும் இணைய இயக்குநர் லிங்குசாமி – விஷால் முடிவு செய்தார்கள். ஆரம்ப கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. ‘துப்பறிவாளன்’ மற்றும் ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜுலையில் ‘சண்டக்கோழி 2’வுக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஷால்.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வரலெட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜுலையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால், தற்போது படப்பிடிப்புக்கான இடங்கள் மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது படக்குழு.

‘சண்டக்கோழி 2′ படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார் லிங்குசாமி.

Comments

comments