சில நாட்களுக்கு முன்னர் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்தார். இதனை அடுத்து ரஜினியை பல்வேறு தரப்பினர் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினி ஏற்கனவே, ‘ரசிகர் மன்றத்துக்கு களங்கம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் உடனடியாக நீக்கப்படுவர், அதற்கான முழு அதிகாரத்தையும் சுதாகருக்கு வழங்குகிறேன்’ என ரஜினி சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இந்த அறிவிப்பின் பின்னர் சைதை ரவி ரஜினியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனை அடுத்து, ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகரன் மீண்டும் இன்று ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அது குறித்து அவர் கூறுகையில்,”அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டோரிடம் ரஜினி ரசிகர்கள் யாரும் எந்த வித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”என்று கூறினார்.
மேலும், அவர் கூறுகையில்,”ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர்களும், நிர்வாகிகளும் மன்ற தலைமையின் ஒப்புதல் இல்லாமல் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பேட்டி, பொது விவாத நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதை தவிர்த்து ஒத்துழைப்பு தரும்படி கேட்டு கொள்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

Comments

comments