ரீமா லாகு

பிரபல இந்தி நடிகை ரீமா லாகு மாரடைப்பால் காலமானார். இவருக்க வயது 59. நேற்று இரவு நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட இவர் மும்பையில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவா் 1980 முதல் 90-களில் இந்தி மற்றும் மராத்தி மொழியில் பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்தவர். இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்டிபெற்றார். மெயினே பியார் கியா, ஆஷிக், சாஜன், ஹம் ஆப்கே ஹெயின் கோன், குச் குச் ஹோதா ஹை, ஹம் சாத் சாத் ஹேயின் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

Comments

comments