‘டிமான்ட்டி காலனி’ படத்தைத் தொடர்ந்து கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இமைக்கா நொடிகள் imaikka nodigalஎனும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் அஜய் ஞானமுத்து. அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தின் வில்லனாக அனுராக் காஷ்யப் நடித்து வருகிறார். இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப் தமிழில் நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக செல்வகுமார், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகர், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா, படத்தொகுப்பாளராக புவன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மே 17 வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி மே 17 சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதன் டீஸர் மே 18(இன்று) வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

Comments

comments