பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி திரையுலகத்தினா் வருகிற 30-ந் தேதி வேலை நிறுத்தம் செய்ய இருக்கிறார்கள்.  படப்பிடிப்பு பணிகள் முதல் திரையரங்குகள் வரை அனைத்தும் மூடப்படுகின்றன. ஆனால் இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதன் தொடக்கமாக கோவை, திருப்பூர், ஈtirupur subramaniரோடு, மற்றும் நீலகிரி மாவட்டங்கயில் உள்ள 169 திரையரங்குகள் எக்காரணம் கொண்டும் மூடப்படாது,  அவை தொடர்ந்து இயங்கும் என்று இந்த நான்கு மாவட்ட திரையரங்கு உரிமையாளா்கள் சங்கத் தலைவா் திருப்பூர் சுப்பிரமணி கூறியிருக்கிறார். அவா் மேலும் திரையரங்குகளை மூடினால்  இதனை நம்பியிருக்கும் சுமார் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்கிறார்.  நடிகர்கர்களில் சம்பள உயர்வுதான் டிக்கெட் விலை உயர்த்துவதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது என்றும் தெரிவிக்கிறார். இவரை தொடர்ந்து மற்ற மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவா்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆயத்தமாக இருக்கிறார்கள்.

இதை பற்றி விஷால் தரப்பில் கேட்கப்பட்ட பொழுது அவர்கள் ”இந்த ஸ்டிரைக் திரையரங்கு உரிமையாளா்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தியும் நடக்கப்போகிறது, இதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்” என்ற பதிலை சொன்னார்கள்.

எது எப்படியிருந்தாலும் கேள்விக்கு சரியான விடை கிடைக்காவிட்டாலும், தவறான விடை சரியாக்கபடாமல் இருந்தாலே நல்லதுதான்…………….

Comments

comments