திரையரங்க டிக்கெட் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவிருப்பதற்கு இந்திய தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி மீதான இந்தியாவின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் குழு தலைவர் சித்தார்த் ராய் கபூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

“திரைப்பட நுழைவுச்சீட்டுகள் மீது அறிவிக்கப்பட்டுள்ள 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு திரைப்பட தொழிலுக்கு பெரும் பின்னடைவைத் தரும்.புதிய திரைப்படங்கள் திரையிடும்போது ஆன்லைன் பைரஸி எனும் அனுமதியின்றி புதிய திரைப்படங்கள் ஆன்லைனில் வெளியிடும் போக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துவருவதால் திரைப்படத் தொழிலே பெரும் போராட்டத்தில் சிக்கியுள்ளது.

இதிலிருந்து திரைத்துறையை மீட்கும்விதத்தில் டிக்கெட் கட்டணத்தில் 5 சதவீதம் மட்டுமே வரி பிடித்தம் செய்யப்பட வேண்டுமென ஏற்கெனவே அரசிடம் முன்மொழியப்பட்டுள்ளது. எக்ஸைட்டிங் வரிவிதிப்பைப் பொறுத்த அளவில், சினிமா காட்சிப் பிரிவானது சேவை வரிவிதிப்பிலிருந்தும் மாநில வாட் வரிவிதிப்பிலிருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளது. திரைப்பட டிக்கெட்டுக்களில் மாநில அரசும் உள்ளாட்சி அமைப்புகளாலும் பொழுதுபோக்கு வரிமட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட திரையிடலில் கிடைக்கும் மொத்த வருவாயிலிருந்து 8 லிருந்து 10 சதவீத அளவில் சராசரி பொழுதுபோக்கு வரி தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் அனைத்து மொழிகளிலும் மத்திய அரசால் வசூலிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்பைத் தவிர்க்கும் விதமாகவே ஜிஎஸ்டி கட்டண வரி 12 சதவீதத்திற்குமேல் ஆகாமல் இருக்கும்படி விதிமுறைகளின்படி விதிக்கப்பட்டிருந்து.

அதற்கு பதிலாக, அரசாங்கம் சூதாட்டம் மற்றும் பந்தய தொழில்களுடன் படத் துறையை சமன் செய்து அதற்கான விளிம்பை 28 சதவிகிதம் வரி வரை உயர்த்தியது. அதற்கு பதிலாக, அரசாங்கம் சூதாட்டம் மற்றும் பந்தய தொழில்களுடன் சினிமாத் துறையை சமன் செய்து அதற்கான வரிவிதிப்பு விளிம்பை 28 சதவிகிதம் வரை உயர்த்தியது.

கூடுதலாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொழுதுபோக்கு வரிவிதிப்பு நிர்ணயம் செய்துகொள்ளும் அதிகாரத்தை வழங்கப்பட்டது. முன்னதாக அது ஜிஎஸ்டிக்குள் உட்பட்டதாகத்தான் இருந்தது. இதுவரை ஹாலிவுட்டின் தாக்குதலை எதிர்த்து நிற்கும் உலகில் உள்ள ஒரே உள்ளூர் திரைப்பட தொழில்களில் ஒன்றாக நமது திரைப்படத்துறை விளங்குகிறது.

துரதிருஷ்டவசமாக அரசாங்கத்தின் ஆதரவுக் குறைவு நமக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய திரைப்படத் தொழில் உலகின் மற்ற பகுதிகளுக்கும் சென்றுபரவும் முதன்மை கலாச்சார வடிவங்களில் ஒன்றாக திகழவேண்டும். நம்மைநோக்கி வரவிருக்கும். உண்மையான ஆபத்திலிருந்து தன்னைத் தானே காத்துக்கொள்ளவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Sidharth-Roy-Kapur-profile-marriage-biography

சித்தார்த் ராய் கபூர்

 

Comments

comments