திரைப்பட இயக்குனர் தாசரி நாராயணராவ் காலமானார்

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் தாசரி நாரயணராவ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவாசப் பிரச்சனை மற்றும் சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தாசரி நாராயணராவின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். தமிழ், தெலுங்கு ஹிந்தி உள்பட 151 படங்களை இயக்கியுள்ளார் தாசரி நாராயணராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments