ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்து உலக புகழ்பெற்ற நடிகர் சர் ரோஜர் மூர் புற்றுநோய் காரணமாக  சுவிஸர்லாந்தில் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 89.

ரோஜர் மூர் ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில்  7 படங்களில் நடித்துள்ளார். 1973 முதல் 198 ஆண்டுவரை ஜேம்ஸ்பாண்ட் என்றாலே ரோஜர் மூர் என்றுதான் அனைவருக்கும் தெரியும்.  படங்களில் நடிப்பதற்கு முன்  ‘தி சைன்ட்’ என்ற தொலைக்காட்சி தொடரில்  சைமன் டெம்பளர் என்ற கதாபாத்திரத்தில் 1962 முதல் 1969 வரை  டி.வி நடிகராக பிரபலமாகியிருந்தார்.

யுனிசெப் அமைப்பின் தூதராகவும் ரோஜர் மூர் பணியாற்றியுள்ளார்.  அவரின் இறுதிச்சடங்கு அவரது விருப்பப்படி மொனோக்கோ நாட்டில் நடைபெற இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

220px-Roger_Moore_The_Saint_1969

‘தி சைன்ட்’ என்ற தொலைக்காட்சி தொடரில் சைமன் டெம்பளர் என்ற கதாபாத்திரத்தில் ரோஜர் மூர்

Comments

comments