dc-Cover-p7m6h6ktlrdtiuh5durg5q5sb7-20170111225630.Medi

அனு இமானுவேல்

நடிகர் விஷாலின் ‘விஷால் ஃபிலிம் பேக்டரி’ நிறுவனம் தயாரிக்க,  இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘துப்பறிவாளன்’.

தெலுங்கில் பிரபலமான அனு இமானுவேல் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்த பிரசன்னா மீண்டும் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

மற்றும், வினய், கே.பாக்யராஜ் ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயபிரகாஷ், ‘தலைவாசல்’ விஜய் ஆகியோரும் நடிக்கும் இப்படத்துக்கு படத்தொகுப்பு அருண் , இசை அரோல் கரோல்லி, ஒளிப்பதிவு கார்த்திக் வெங்கட்ராமன்.

துப்பறிவாளன் படம், துப்பறியும் வேலை செய்யும் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் பற்றியும், அவர் துப்பறியும் விஷயங்கள் பற்றியும் பேசுகிற படம்.

‘துப்பறிவாளன்’ படம் குறித்து இயக்குனர் மிஷ்கின் என்ன சொல்கிறார்?

“ஆங்கிலத்தில் வெளிவந்த “ஷெர்லாக் ஹோம்ஸ்” தமிழில் வெளிவந்த “துப்பறியும் சாம்பு” போன்ற ஒரு துப்பறியும் கதையாக இந்தப்படம் இருக்கும்.

தமிழ்சினிமாவில் துப்பறியும் கதைகள் அதிகம் வந்ததில்லை என்ற குறையைப்போக்குகிற வகையிலும், ஒரு தனித்துவமான படமாகவும் இருக்கும் துப்பறிவாளன்.

இந்தப்படத்தில் கணியன் பூங்குன்றன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஷால்.

யாதும் ஊரே ; யாவரும் கேளீர் என்று பாடிய கவிஞர் கணியன் பூங்குன்றனார் பெயரைத்தான் இப்படத்தின் கதாநாயகனுக்கு வைத்துள்ளேன்.

இந்தப்படத்தில் விஷால் ஏற்றுள்ள கதாபாத்திரம் மிகவும் பலமான கதாபாத்திரம்.

படம் முழுக்க விஷாலுடன் பயணிக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளார்.

அறிவுபூர்வமான துப்பறியும் காட்சிகள், மெய்சிலிர்க்கவைக்கும் சண்டை காட்சிகளோடு இணைந்து ஒரு மெல்லிய காதல் இதுதான் துப்பறிவாளன் படத்தின் ஸ்பெஷல்.

தெலுங்கில் பிரபலமான அனு இம்மானுவேல் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

துப்பறிவாளன் படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகள் மிகப் பெரிய அளவில் பேசப்படும்.

ஒரு நாள் நானும் தம்பி விஷாலும் பேசிக்கொண்டிருந்தபோது விஷால் என்னிடம் “துப்பறிவாளன் படத்தை பொறுத்தவரை இசை வெளியீட்டு விழாவுக்கு பதிலாக ‘ ஆக்ஷன் வெளியீட்டு விழா ‘ ஒன்றை ஏற்பாடு செய்வோம் என்று வித்யாசமான ஒரு ஐடியாவை என்னிடம் சொல்லி அசரவைத்தார்.

அந்த அளவுக்கு இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

விஷாலும் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்.

விஷால் என்னுடைய மனதுக்கு மிகவும் பிடித்த ஒரு நபர், அவர் என்னுடைய அன்பான தம்பி.
நான் இதுவரை பணியாற்றிய கதாநாயகர்களில் விஷாலைப்போன்று எனக்கு மிகவும் நெருக்கமானவர் யாருமில்லை.

நான் அவருடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்வேன், அவரும் என்னுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்வார்.

என்னுடைய படங்களில் ஒரு சின்ன கதாபாத்திரம் வந்தாலும் அது நிச்சயம் பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும்.

அஞ்சாதே படத்தில் பூ போட்டு செல்லும் அந்த பாட்டியில் ஆரம்பித்து நான் இயக்கிய பல படங்களில் இடம் பெற்ற சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ஒரு காட்சியில் வந்தாலும் அதனுடைய வாழ்கையை நமக்கு கூறிச் செல்லும்.

பாக்யராஜ் துவங்கி இப்படத்தில் பலர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

நிச்சயம் அனைத்து கதாபாத்திரமும் கவனிக்க வைக்கும் கதாபாத்திரமாக இருக்கும்.

நான் அதிமாக புதியவர்கள் வைத்து படம் இயக்க கூடிய ஒரு இயக்குநர்.

இப்படத்தில் விஷாலை போன்ற பெரிய நடிகர் நடிப்பது படத்துக்கு மிகப்பெரிய பலத்தை தந்துள்ளது.”

என்று துப்பறிவாளன் படத்தின் சிறப்புகளை விவரிக்கிறார் மிஷ்கின்.

இங்கே மிஷ்கின் சொன்னதெல்லாம் உண்மையிலேயே துப்பறிவாளன் படத்தில் இருந்தால் படம் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது.

துப்பறிவாளன் வெற்றி நடிகர் விஷாலுக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர் விஷாலுக்கும் அவசியத் தேவையாக இருக்கிறது.

Comments

comments