இன்னமும் ‘ரிட்டர்ன் கொடு’ என்று விநியோகஸ்தர்கள் போய் முற்றுகையிடாத ஒரே வீடு அஜீத்தின் வீடுதான்! ஆணானப்பட்ட ரஜினி, விஜய் வீடுகளுக்குக் கூட, நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்கள் திட்டம் போட்டு கூடிவிட முயன்றதை இன்டஸ்ட்ரி அறியும். ஆனால் அஜீத்தின் வீட்டுக்கு மட்டும் இவர்கள் போகாததன் பின்னணி என்ன? இன்றுவரை அது ஒரு புரியாத புதிர். (இத்தனைக்கும் அவர் நடித்த சில படங்கள், விநியோகஸ்தர்களின் பாக்கெட்டை பதம் பார்க்காமல் இல்லை)

இது ஒருபுறமிருக்க… அஜீத்தின் முந்தைய பட வியாபாரங்களை முறியடிக்கும் விதத்தில் விவேகம் படத்தின் வியாபாரம் அமைந்து வருகிறதாம். உதாரணமாக கர்நாடகா ஏரியாவில்

வேதாளம்- 3C
என்னை அறிந்தால்- 2.25C
ஆரம்பம்- 1.5C
வீரம்- 1.5C

என்றிருந்த வியாபாரம், விவேகம் படத்திற்காக ஒரேயடியாக உச்சம் தொட்டிருக்கிறது. எவ்வளவு தெரியுமா? ஐந்து புள்ளி எட்டு கோடி! இப்படி புயல்வேக பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கும் அஜீத், இப்படத்தின் மொத்த வியாபாரத்தை எத்தனை கோடியில் கொண்டு போய் நிறுத்துவார் என்பதை அறிய பிரமிப்போடு காத்திருக்கிறது இன்டஸ்ட்ரி.

நீங்க எப்ப கட்சி ஆரம்பிக்க போறீங்க அஜீத்?

Comments

comments