14-51-53-power+star+00001

சூறைக்காற்று சுற்றி சுற்றியடிக்கும் ஆடி மாதங்களிலோ, அல்லது ரத்னா பேன்ஸ், உஷா பேன்ஸ் ஷோ ரூம்கள் பக்கமோ, ஒரு காலத்திலும் நடமாட முடியாத துர்பாக்கியசாலியாகிவிட்டார் ‘பவர் கட்’ ஸ்டார் சீனிவாசன் (பிரைட்டா இருந்தால்தானேய்யா பவர் ஸ்டார். இல்லேன்னா பவர் கட்தானே?) ஒரு எக்ஸிபிரஷனும் வராமலே நடிகர் என்று பெயர் வாங்கியதுடன் தினந்தோறும் லட்சக்கணக்கில் கல்லா கட்டும் பிசியான ஒரு நடிகர் என்றால், அது இவர் மட்டும்தான். இத்தகைய அருமை பெருமைகளுக்கு ஆளான பவர், தற்போது நடித்து (?) திரைக்கு வந்திருக்கும் படம் ‘அட்ரா மச்சான் விசிலு’

இந்த படத்தை ஓட வைக்கும் பொருட்டு சில முடிவுகளை எடுத்திருக்கும் தயாரிப்பாளர், சின்ன சின்ன பிரமோஷன்கள் மூலம் அட்ரா மச்சான் விசிலுக்கு அஸ்திவாரத்தை பலமாக்கிக் கொண்டிருக்கிறார். அந்த முயற்சி பலித்ததா, இல்லையா என்பதல்ல மேட்டர். அப்படியொரு முடிவுக்கு கைநீட்டி… அதுவும் கைநிறைய சம்பளம் வாங்கிய நடிகர்கள் எப்படியொரு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள் பாருங்கள்…

ஒரு குறிப்பிட்ட தேதியை முன் கூட்டியே முடிவு செய்து, சென்னையிலிருக்கும் உதயம் தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது நேரில் வந்து தரிசனம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் பவர் கட் சீனிவாசனிடம். அப்படி வரும்போது அங்கு படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் உற்சாகம் அடைவார்கள் என்பது காலம் காலமாக நிலவி வரும் மூட நம்பிக்கைகளில் ஒன்று. இதற்கான முன் அனுமதியை கேட்கும் போது, ஆஹா… தாராளமா வர்றேன் என்று சொன்ன பவர் கட், ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் கொடுத்துவிட்டார். பிரஸ் வரும்ல? என்றும் கேட்டுக் கொண்டாராம் அப்போது. அதற்காகவே இணைய தளங்கள் மற்றும் தொலைக்காட்சி கேமிராக்களுக்கு சொல்லி வரவழைத்தும் விட்டார்கள்.

நேரம் ஓடிக் கொண்டிருந்ததே தவிர, பவர் கட் ஸ்பாட்டுக்கு வரவேயில்லை. அதிர்ச்சி ப்ளஸ் டென்ஷன் தலைக்கேற, அவருக்கு போன் அடித்தாராம் தயாரிப்பாளர். “இல்லண்ணே… அது வந்து… என்னோட விக்கை மனைவி பீரோவுல வச்சு பூட்டிட்டு ஷாப்பிங் போயிட்டாங்க. எப்ப வருவாங்கன்னு தெரியல. அப்படியே வழுக்கை தலையோட வந்தால், என் இமேஜ் என்னாவறது?” என்றாராம் பவர் கட்.

ஒரு ஹீரோ தன் வழுக்கை தலையின் நலன் கருதி ஒன்றுக்கும் மேற்பட்ட விக்குகள் வைத்திருப்பார் என்பது உலகறிந்த ஞானம். அவர் சொல்வது போல ஒரே ஒரு விக்தான் அவர் தலையில் பொருத்தப்படுகிறது என்றால், அந்த தலையும், அந்த தலையில் வைக்கப்படும் அந்த கருப்பு கிரீடமும் எந்தளவுக்கு நாறிப் போயிருக்கும் என்பதை யோசிக்கக் கூட முடியவில்லையே?

ஹ்ம்ம்… இப்படிதான் படம் எடுக்க பணம் போட்டவர்களின் வயிற்றெரிச்சலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் பல முன்னணி பின்னணி அழுகுணி ஹீரோக்கள்!

(இப்படத்தில் நடித்த இன்னொரு ஹீரோவான மிர்ச்சி சிவாவின் கதை இன்னொரு செய்தியாக… விரைவில் )

Comments

comments