NTLRG_20160724083357275671

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கன்னட நடிகர் சுதீப் நாயகனாக நடித்துள்ள படம் முடிஞ்சா இவனை புடி. நித்யாமேனன் நாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்துள்ள இந்த படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் சில கன்னட நடிகர் நடிகையர் நடித்திருக்க, நாசர், இமான் அண்ணாச்சி, சதீஷ் போன்ற தமிழ் நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றபோது, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி ஆகிய மூன்று ஹீரோக்களை வைத்து ஆடியோவை வெளியிட்டார் கே.எஸ்.ரவிக்குமார்.

இந்த நிலையில், அரிமா நம்பி பட இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்துள்ள இருமுகன் படத்தின் ஆடியோ விழா ஆகஸ்ட் 2-ந்தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவிலும் மூன்று ஹீரோக்கள் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிடுகிறார்கள். ஆனால் மூன்று பேருமே தமிழ் ஹீரோக்கள் அல்ல. தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன், தெலுங்கு நடிகர் ராம்சரண்தேஜா, மலையாள நடிகர் நிவின்பாலி ஆகியோர் கலந்து கொள்கிறார்களாம்.

 

Comments

comments