19-45-45-anirudh_fd_copied001

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ படம் மிகவும் வித்தியாசமாக தயாராகி வருகிறது. இப்படத்திற்காக அனிருத் இசையமைத்திருக்கும் சில பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

அப்படத்தில் இடம்பெற்ற நீ என் காதலன் பாடல் காப்பியடிக்கப்பட்ட பாடல் என்ற சர்ச்சை எழும்பியுள்ளது. யூடியூபில் Father Vs Daughter Beatboxing என்ற வீடியோவிலிருந்து நீ என் காதலன் பாடல் காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்பா, மகள் தங்களுடைய வாயின் மூலம் சத்தத்தை வரவழைத்து இசையமைத்துள்ள அந்தப் பாடல் யூடியூபில் மட்டும் 95 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ரெமோ பாடலில் படக்குழுவினர் Additional Beat Box Sampled From Youtube என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Comments

comments