12-03-43-sivakarthi

சிவகார்த்திகேயன் படங்களில் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு ‘ரெமோ’ படத்திற்கு இருந்து வருகிறது. அதற்கு காரணம் அந்த படத்தில் பணிபுரியும்
டெக்னீசியன்கள் எல்லோரும் பிரபலமானவர்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சிவகார்த்திகேயன் ஏற்றிருக்கும் பெண் வேடம் தான் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது போதாதென்று தற்போது இன்னொரு தகவலும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

பொதுவாக ஷங்கர் படங்களில் தான் அந்தப் படத்தில் நடிக்கின்ற ஹீரோவின் கெட்டப் எப்படி இருக்குமோ? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பரவ ஆரம்பிக்கும். ஏனென்றால் அவர் படத்தில் ஒரு ஹீரோ நடிக்கிறார் என்றால் கமிட்டான நாள் முதல் வெளியில் தலை காட்டாமல் படப்பிடிப்பு விட்டால் வீடு, வீடு விட்டால் படப்பிடிப்பு என்று ரிலீஸ் வரை கெட்டப் ரகசியத்தை பாதுகாப்பார்கள்.

ஆனால் தற்போது ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனின் மூன்றாவது கெட்டப்பை ரொம்பவே பாதுகாத்து வருகிறார்களாம் படக்குழுவினர். என்னாது ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று கெட்டப்பா? இரண்டு கெட்டப் தானே சொன்னாங்க என்று ஆச்சர்யப்பட வேண்டாம். ஆமாம் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்று கெட்டப் இருக்கிறதாம்.

ஏற்கனவே இப்படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ட்ராக் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் இருப்பது போன்றும், ஒரு சாதாரண இளைஞரைப் போன்றும் புகைப்படங்கள் வெளியாகின. இந்த இரண்டு கெட்டப்புகள் தான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு என்று நினைத்தால், இப்போது மூன்றாவதாக ஒரு கெட்டப் ரகசியமும் கசிந்திருக்கிறது. ஆமாம், லேடி கெட்டப், சாதாரண இளைஞர் இந்த இரண்டு கெட்டப்புகளைத் தவிர படத்தில் மூன்றாவதாக மெர்சலான ஒரு முதியவர் கெட்டப்பும் உண்டாம்.

பட ரிலீஸ் வரை அந்தக் கெட்டப் ரகசியம் வெளியில் தெரிந்து விடக்கூடாது அது தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே முதியவர் கெட்டப் ரகசியத்தை பாதுகாத்து வருகிறார்களாம் ரெமோ படக்குழுவினர்.

Comments

comments