19-02-49-NT_20160718151427096774

இந்த வருடத்தில் மம்முட்டியின் முதல் படமாக வெளியான ‘புதிய நியமம்’ படத்தில் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் ஆண்களை வேரறுக்கும் உன்னதமான கேரக்டரில் நடித்து பெண்களிடம் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றார் மம்முட்டி.

ஆனால் இந்த வருடத்தில் மம்முட்டி நடித்த இரண்டாவது படமான ‘கசபா’ வெளியாகி கடந்த பத்து நாட்களிலேயே மம்முட்டியும் அவரது படமும் தொடர் கண்டனங்களுக்கு ஆளாகி வருகின்றன. காரணம் அந்தப்படத்தில் பெண்களை மோசமாக சித்தரித்துள்ளார்கள் என்பதுதான்..

சில தினங்களுக்கு முன் கேரள மாதர் சங்கம் இந்தப்படத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்தது..

ஆனால் அதைவிட ஆச்சர்யமாக மம்முட்டியின் ரசிகர் ஒருவரே ‘கசபா’ பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். கேரளாவை சேர்ந்த அந்தோணி ரிச்சர்டு என்பவர், மம்முட்டியின் மிக தீவிரமான ரசிகராம். சமீபத்தில் வெளியான ‘கசபா’ படம் பற்றிய ட்ரெய்லர் மற்றும் படம் குறித்து வெளியான தகவல்களை பார்த்துவிட்டு குடும்பத்துடன் படம் பார்க்க சென்றாராம்.ஆனால் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பெண்களுடனோ, குழந்தைகளுடனோ அமர்ந்து பார்க்கும்படியாக இல்லை என்றும், வக்கிரமான காட்சிகளும் வசனங்களும் நிறைந்ததாக இருக்கிறது என்றும் கூறியுள்ள அவர், இந்தப்படத்திற்கு அனைவரும் பார்க்கலாம் என்கிற விதமாக யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது எப்படி என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தும் எந்த பலனும் இல்லாததால் தான் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளாராம்.

Comments

comments