NTLRG_20160709172935682787

நட்சத்திர தம்பதியரான சரத்குமார் – ராதிகாவின் மகள் ரேயான். இவர் லண்டனில் பட்டம் பெற்றவர். தற்போது ராடன் தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இவருக்கும், பெங்களூரை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மதுனுக்கும் பெரியோர்களால் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த செப்.,23ம் தேதி திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது.

இவர்களது திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், சரத்குமார், ராதிகா மற்றும் இவர்களது மகன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து திருமண பத்திரிக்கையை கொடுத்து அழைப்பு விடுத்ததுடன், மணமக்களை வாழ்த்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்கள்.

 

Comments

comments