NTLRG_20160724121701944494

உலக புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், நடிகர் நடிகைகள், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் மாதிரியான சூப்பர் ஹீரோக்களின் சிலைகளை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பும் நிறுவனங்கள் சீனாவில் செயல்படுகிறது. அந்த நிறுவனங்களில் இப்போது தயாராகிக் கொண்டிருக்கறது. ‘கபாலி’ சிலைகள். ஆயிரக்கணக்கில் தயாராகியுள்ள கபாலி சிலைகள் தற்போது சீனாவில் இருந்து கப்பல் மூலம் சென்னைக்கு வந்த கொண்டிருக்கிறது.

‘கபாலி’ படத்தை தயாரித்துள்ள வி.கிரியேஷன் இந்த சிலைகளுக்கான ஆர்டரை கொடுத்துள்ளது. பொம்மையின் சாம்பிள்கள் இப்போது வி.கிரியேஷனுக்கு வந்து சேர்ந்துள்ளது. விரைவில் பொம்மைகள் வந்து சேர இருக்கிறது. ஒவ்வொரு சிலையும் ஆறரை இன்ஞ் உயரம் கொண்டதாக இருக்கும். அதன் கீழ் கபாலி என்று எழுதப்பட்டிருக்கும். இந்த சிலைகள் சுமார் ஆயிரம் ரூபாய் வரை விற்க வாய்ப்பிருக்கிறது. கபாலிக்கு விளம்பர ஸ்பான்சர்களாக இருந்த நிறுவனங்கள் மூலமும். முன்னணி ஆன்லைன் நிறுவனங்கள் மூலமும் விற்கப்பட இருக்கிறது. இதற்கான ஆன்லைன் முன்பதிவும் தொடங்கியுள்ளது.

 

Comments

comments