17-07-53-AEM

லிட்டில் சூப்பர் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் தனக்குத்தானே பட்டங்கள் சூட்டிக்கொண்டாலும், உண்மையில் வௌங்காத ஸ்டாராகவே இருக்கிறார் ‘பீப் அரசன்’ சிம்பு.

அவர் நடித்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று அவராலேயே சொல்ல முடியாத அளவுக்கு வருடக்கணக்கில் இழுத்துக்கொண்டிருக்கின்றன.

சிம்பு நடித்த படங்கள் வெளியாகாமல் வருடக்கணக்கில்  முடங்கிப்போய்விடுவதால், அவரை வைத்து படம் தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வருவதில்லை.

அவரை வைத்து படம் இயக்க இயக்குநர்களும் ஆர்வம் காட்டுவதில்லை.

சிம்புவிடம் கதை சொல்ல உதவி இயக்குநர்களும் தயாராக இல்லை.

இத்தனை இல்லைக்கும் ஒரே காரணம்தான்.

சிம்புவுடன் இணைந்தால் நம் எதிர்காலமே இருண்டுபோய்விடும் என்ற பயம்தான்.

சிம்பு உடன் இணைந்து பணியாற்றக் கூடாது என்று பயப்படுபவர்களின் பட்டியலில் தற்போது கதாநாயகி நடிகைகளும் சேர்ந்துள்ளனர்.

அவருடன் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் மத்தியில் தயக்கம் நிலவுவதாக தகவல் அடிபடுகிறது.

சிம்பு படத்தில் நடித்தால், நடிப்பதற்கு பேசப்பட்ட சம்பளம் முழுசாக கைக்கு வராது. (படமே முடியாதபோது எந்த தயாரிப்பாளர்தான் நடிகையின் முழு சம்பளத்தையும் கொடுப்பார்?)
அதுமட்டுமல்ல, அந்தப் படமே வெளிவராமல் வருடக்கணக்கில் முடங்கிக்கிடக்கும்.

பத்திரிகையாளர்கள் தொடங்கி பார்ப்பவர்கள் எல்லாம் அந்தப் படம் எப்ப வரும் என்று கேள்விகேட்டே வெறுப்பேற்றவார்கள்.

இதெல்லாம் நடிகைகளுக்கு டென்ஷனான விஷயம்.

அதன் காரணமாகவே சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நழுவ ஆரம்பித்துவிடுகிறார்களாம்.

‘த்ரிஷா இல்லானா நயன்தாரா’ என்ற ஆபாசப் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ‘ஏஏஏ’  என்ற படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகளை அணுகியுள்ளனர்.

ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், ஸ்ரீதிவ்யா என இண்டஸ்ட்ரியில்  உள்ள பல நடிகைகளை அணுகினார்களாம்.

சொல்லிவைத்தார்போல் அனைவருமே டேட் இல்லை என்று நழுவிவிட்டனர்.

இதில் என்ன கொடுமை தெரியுமா?

சிம்புவின் பால்ய காலத்து சினேகதியான த்ரிஷா கூட சிம்பு உடன் நடிக்க மறுத்துவிட்டாராம்.

கடைசியில்  வேறு வழியில்லாமல்… மார்க்கெட் இல்லாத ஸ்ரேயா சரணை கமிட் பண்ணியுள்ளனர்.

சில வருடங்களுக்கு முன்புவரை முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா தற்போது மார்க்கெட் இழந்து வீட்டில் சும்மா இருக்கிறார்.

இந்நிலையில்தான் சிம்புவுடன் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது.

வீட்டில் சும்மா உட்காருவதற்கு பதில் சிம்புவுடன் நடிப்பதில் தப்பில்லை என்று நினைத்தாரா… அல்லது சிம்பு படம்தான் ரிலீஸ் ஆகாதே என்று நினைத்தாரா தெரியிவில்லை.

மறுபேச்சு பேசாமல் மீட்டரை வாங்கிக் கொண்டு ஏஏஏ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார் ஸ்ரேயா.

Comments

comments