NT_20160606153622751547

கடந்த வாரம் ரிலீசான ஹவுஸ்புல் 3 பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பார்த்தததை விட அதிகமாக வர்த்தகமானதால், முதல் வாரத்திலேயே இப்படத்தின் வசூல் ரூ.52 கோடியை கடந்துள்ளது. இப்படம் ரிலீஸ் செய்யப்பட்ட வெள்ளிகிழமையன்று ரூ.15.21 கோடியையும், சனிக்கிழமை ரூ.16.30 கோடியையும், ஞாயிற்றுக்கிழமையில் ரூ.21 கோடியையும் வசூலித்துள்ளது. ரிலீஸ் செய்யப்பட்ட முதல் 3 நாட்களிலேயே இப்படத்தின் வசூல் ரூ.52 கோடியை கடந்துள்ளதால் மிக விரைவிலேயே ரூ.100 கோடி வசூலித்த பாக்ஸ் ஆபிஸ் படங்களின் பட்டியலில் இப்படமும் சேர வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை இப்படம் பெற்றுள்ளதால் எதிர்பார்த்ததை விட அதிக வசூல் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. அடுத்த சில வாரங்களுக்கு பெரிய படங்கள் ஏதும் வெளி வராததும், ரசிகர்கள் குடும்பத்துடன் பார்க்கும் அளவிலான படங்கள் ஏதும் வராததும் இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

Comments

comments