12-46-55-NT_20160626104748691054

எப்படிப்பட்ட ரோலையும் கஷ்டப்பட்டு நடித்து அசத்திவிடுபவர் பாலிவுட்டின் பிக் பி என கூறப்படும் அமிதாப் பச்சன். இதுவரை பல விதமான வித்தியாசமான ரோல்களில் நடித்த அமிதாப், இப்போது 102 வயது முதியவராக நடிக்க உள்ளார். ஆல் இஸ் வெல் படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் உமேஷ் சுக்லா, ‘102 நாட் அவுட்’ என்ற படத்தை இயக்க உள்ளார். இதில் அமிதாப் பச்சனும், பரேஷ் ராவலும் முக்கிய ரோலில் நடிக்க இருக்கின்றனர்.
இதுகுறித்து உமேஷ் சுக்லா கூறியிருப்பதாவது… ”102 நாட் அவுட் படத்தின் ஷுட்டிங் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இது ஒரு குடும்ப பாங்கான படம். அமிதாப் 102 வயது முதியவராக நடிக்க இருக்கிறார். படத்தின் பெரும்பகுதி மும்பையில் படமாக்கப்பட இருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை, அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Comments

comments