00-feature-49

‘தெறி’ படத்தை அடுத்து பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சதீஷ், ஹரிஷ் உத்தமன், ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தை திருநெல்வேலியை மையமாக வைத்து குடும்பப்படமாக உருவாக்கி வருகிறார் இயக்குநர் பரதன்.

தற்போது இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இப்படத்தில் விஜய் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். ‘வேதாளம்’ படத்தில் கணேஷாகவும், வேதாளமாகவும் இரண்டு வேடங்களில் அஜித் நடித்ததைப் போல, ‘விஜய் 60’ படத்தில் விஜய்யும் இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறாராம்.

அதில் ஒன்று அமைதியான கிராமத்து மனிதராகவும், மற்றொன்றில் சிட்டி ரவுடியாகவும் நடிக்கிறாராம். கிராமத்து கேரக்டருக்காக நெல்லை பாஷை பேசி நடித்து வருகிறாராம் விஜய். விரைவில் திருநெல்வேலியில் மீண்டும் படப்பிடிப்பை துவக்கவிருக்கிறதாம் விஜய் 60 படக்குழு.

Comments

comments