thalapthy60-vijay

தெறி வெற்றிக்குப் பிறகு பரதன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 60 வது படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடந்தது. சில நாட்களுக்கு முன்பு ஒரு பாடல் காட்சிக்காக ராமாபுரம் அருகே பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பினை நெல்லை பகுதிகளில் படம்பிடித்து வருகின்றனர். இப்படத்தில் நடித்து வரும் மலையாள நடிகையான நடிகை அபர்ணா வினோத் தன்னுடைய வேடம் குறித்து மனம் திறந்தார்.

‘’விஜய் 60 படத்தில் கிராமத்துப் பெண் வேடத்தில் நடிக்கவுள்ளேன். என்னுடைய காதாபாத்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. ஜூன் 3-ம் தேதி விஜய் 60 படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்’’ என்றார். இரட்டை வேடங்களில் விஜய் நடித்து வரும் இப்படத்திற்கு ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ என்று பெயர் சூட்டவிருப்பதாக கூறப்படுகிறது.

இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் என 2 நடிகைகள் நடித்து வருகின்றனர்.

Comments

comments