15-08-04-vijay-gv

ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது குறித்து ஒரு பெரியா வாரே நடந்து கொண்டிருக்கிறது. அந்த வார் இப்போது தான் கொஞ்சம் ஓய்ந்தது.

ஆனால் தற்போது அதை மீண்டும் தொடங்கி வைத்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். அதாவது விஜய்யை பெருமைப்பட வைக்கும் அளவிற்கு வாழ்த்து தெறிவிக்க வேண்டும் என்று நினைத்து ஹேப்பி பர்த்டே தெரிவித்ததுடன், “தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்” என்று கூறிவிட்டார். அவ்வளவு தான் அடுத்த நொடியிலிருந்து போர் ஆரம்பமாகிவிட்டது. டுவிட்டரில் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் அடித்து கொள்ள இடையில் வந்த ரஜினி ரசிகர்கள் ஜி.வி.பிரகாஷை விட்டு விளாச ஆரம்பித்துவிட்டார்கள்.

‘நீ விஜய்யை தாராளமாக வாழ்த்திக்கோ.. அதுக்கு ஏன் சூப்பர் ஸ்டார் கிட்ட போறே.. அடுத்த புரட்சித் தலைவர், அடுத்த நடிகர் திலகம், அடுத்த புரட்சித் தலைவின்னு சொல்ல முடியுமா உன்னால… அப்புறம் எப்படி அடுத்த சூப்பர் ஸ்டார்னு மட்டும் சொல்ற’ என்று ஏக வசனத்தில் விட்டு வெளுத்துக் கொண்டிருக்கிறார்கள். பிறந்த நாளன்னிக்கு விஜய் ரசிகர்களை குளிர்விப்பதாக நினைத்துக் கொண்டு குளவிக் கூட்டை கலைச்சிட்டாரே இந்த ஜிவி பிரகாஷ்

Comments

comments