654448

விஜயசேதுபதி நடித்த படங்களில் அவர் போலீசாக நடித்த சேதுபதி படத்தில் அவருக்கும், ரம்யா நம்பீசனுக்குமிடையே ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றது. பீட்சா படத்தில் முதன்முறையாக காதலர்களாக நடித்தபோது வெளிப்படுத்திய ரொமான்சை விட, இந்த படத்தில் கணவன் மனைவியாக நடித்து அதிகப்படியான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தனர். அது நன்றாக ஒர்க்அவுட் ஆனதால் அதன்பிறகு விஜயசேதுபதி நடிக்கும் எல்லா படங்களிலுமே ரொமான்ஸ் காட்சிகளை கூடுதலாக வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், சீனுராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள தர்மதுரை படத்திலும் தமன்னாவுடனும் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறாராம் விஜயசேதுபதி. மதுரை வட்டார தமிழில் உருவாகியுள்ள இந்த படத்தில் கிராமத்தில் மருத்துவமனை வைத்திருக்கும் டாக்டர் வேடத்தில் விஜயசேதுபதி நடிக்க, அவரது முறைப்பெண்ணாக தமன்னா நடித்துள்ளாராம். அந்த வகையில், இருவரும் காதலர்களாக நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பதோடு, ரொமான்ஸ் காட்சிகளில் மிக இயல்பாக நடித்துள்ளார்களாம். அதனால் சேதுபதி படத்தைப்போலவே இந்த படத்திலும் விஜயசேதுபதி, தமன்னாவின் ரொமான்ஸ் காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும் என்கிறார்கள்.

 

Comments

comments