12-51-19-NT_20160626110458775965

மலையாள சேனல்களில் தற்போது 30க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இவற்றில் பெரும்பாலான சீரியல்களின் கதை. கள்ளக் காதல், கணவனுக்கு தெரியாமல் மனைவி இன்னொருவருடன் தொடர்பில் இருப்பது, மனைவிக்கு தெரியாமல் கணவன் வேறு குடும்பம் வைத்திருப்பது. இப்படி தவறான உறவுகளுக்கு முக்கியத்தும் கொடுப்பதாக இருக்கிறது. சில சீரியல்களில் பாலியல் பலாத்கார காட்சிகள் இடம் பெறுகிறது. இதுகுறித்து பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு புகார் அளித்தது.
இது தொடர்பாக தொடரப்பட்ட ஒரு பொதுநல வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் டி.வி சீரியல்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வரவேண்டும் என்று அரசை வலியுறுத்தியது. இந்த நிலையில் திரைப்படங்களுக்கு இருப்பது போன்று சின்னத்திரை சீரியலுக்கும் தணிக்கை குழு அமைக்க கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக அது மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. எனவே விரையில் கேரளாவில் சீரியலுக்கென தனி தணிக்கை குழு அமையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Comments

comments