NTLRG_20160610113115407756

அனுஷ்கா, ஹன்சிகா, நயன்தாரா, த்ரிஷாவைத் தொடர்ந்து தற்போது வரலட்சுமியும் ‘அம்மாயி’ என்ற பேய் படத்தில் நடிக்கிறார். கே.பி.ஆர் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் கே.பி.ராஜேந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை ஜி.சங்கர் இயக்குகிறார். இவர் இயக்குனர் கிருஷ்ணாவின் உதவியாளர். வினய் ஹீரோவாக நடிக்கிறார். மயில்சாமி, சாம்ஸ், பருத்தி வீரன் சுஜாதா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார், இளையராஜா இசை அமைக்கிறார்.

“இது தாய்பாசத்தை அடிப்படையாக கொண்ட பேய் படம். எங்கள் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதை எழுதியுள்ளேன். படத்தின் கதையை கேட்டதுமே இளையராஜா இசை அமைக்க ஒத்துக் கொண்டார். வரலட்சுமி இதுவரை யாரும் நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அம்மாயி கேரக்டரில் நடிக்க முக்கிய சீனியர் ஹீரோயின்களுடன் பேச்சு நடந்து வருகிறது. என்கிறார் இயக்குனர் ஜி.சங்கர்.

 

Comments

comments