NTLRG_20160610112525215835

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ பிரமாண்ட வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் பிரபாஸ், ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, சத்யராஜ் நடித்து வருகிறார்கள். முதல் பாகத்தில் மகிழ்மதி தேசத்தில் அடைக்கப்பட்டிருக்கும் அனுஷ்காவை மீட்க போராடும் புரட்சி படை வீராங்கனையாக தமன்னா நடித்திருந்தார்.

இரண்டாம் பாகத்திலும் அதே கேரக்டரில் தொடருகிறார். போர் வீராங்கனை என்றாலும் முதல் பாகத்தில் அவருக்கு ஆக்ஷன் காட்சிகளை விட பிரபாசுடனான ரொமான்ஸ் காட்சிதான் அதிகம். ஆனால் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவிற்கு ரொமான்ஸ் காட்சிகள் அதிகம். தமன்னாவுக்கு ஆக்ஷன் காட்சிகள் அதிகம். படத்தின் கிளைமாக்சில் 30 நிமிடம் இடம்பெறும் போர்க்கள காட்சி முழுக்க தமன்னா வருகிறார். குதிரையில் இருந்து கொண்டே வாள் சண்டை போடுகிறார்.

இதற்காக அவருக்க தீவிரமாக குதிரையேற்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாலிவுட் சண்டை இயக்குனர் ஜீத்து வர்மா தமன்னாவுக்கு குதிரையேற்ற பயிற்சி வழங்கி வருகிறார். பூஜா எனப் பெயரிடப்பட்டுள்ள குதிரையில், தினமும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் தமன்னா. அதேபோல தமன்னாவுக்கு வாள் சண்டை பயிற்சி அளிக்க ஹாலிவுட் சண்டை இயக்குனர் லீ வருகிறார். குறித்த காலத்திற்குள் குதிரையேற்ற பயிற்சியை முடித்து விட்ட தமன்னா அடுத்து வாரம் முதல் வாள் சண்டை பயிற்சி பெறுகிறார். ஜூலை முதல் வாரத்திலிருந்து கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படுகிறது.

 

Comments

comments