iraivi-lakshmi-ramakrishnan

விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் இறைவி. கடந்த ஜுன் 3ஆம் தேதி வெளியான இப்படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் படத்தைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். படத்தில் தயாரிப்பாளர்கள் பற்றி விமர்சனம் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இறைவி படம் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கோபமாக சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

அதில் “என்னை பொறுத்தவரை இறைவி படத்தில் அழுத்தமான பெண்கள் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. ஏராளமான வன்முறை மற்றும் படத்தில் வரும் திருப்பங்களும் சரியில்லை. மேலும், பாபிசிம்ஹா கதாபாத்திரம் முற்றிலும் ஏமாற்றத்தையே கொடுத்தது. அவர் ஒரு கல்லூரி மாணவர் போல் இருக்கிறார். திடீரென பெண்களை ஆதரிப்பது போல் காட்டுகிறார்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளார். அவருடைய இந்தக் கருத்துக்கு ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா?”

Comments

comments