14-10-09-Vishal-Linguswami

‘அஞ்சான்’ தோல்வியால் துவண்டு கிடந்த லிங்குசாமி தான் இயக்கிய ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து மீண்டும் ஒரு வெற்றியை பெற்றிவிட வேண்டும் என்று நினைத்தார். விஷாலிடம் அதற்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுப்பட்டார். சுமுகமாக முடிந்த பேச்சுவார்த்தையை அடுத்து முதற்கட்ட வேலைகளில் ஈடுப்பட்டார் லிங்குசாமி. ஆனால் இருவருக்கும் இடையே என்ன கோளாறோ? தெரியவில்லை தீடிரென இந்தப் படத்தை கைவிடப்போவதாக அறிவித்தார் விஷால்.

சில நாட்கள் கழித்து லிங்குசாமியும் விஷாலை குற்றம்சாட்டி படத்தை கைவிடப்போவதாக கூறினார். இதனால் இருவருக்கும் இடையே பகை முற்றிவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் லிங்குசாமி – விஷால் இருவரும் பேசி பிரச்சினைகளைப் பேசி முடித்து மீண்டும் இணைய முடிவு செய்திருக்கிறார்கள்.

அல்லு அர்ஜூன் படத்துக்கு முன்பாகவே, இப்படம் தொடங்க இருக்கிறது. யுவன் இசை, மதி ஒளிப்பதிவு என படக்குழுவினர் ஒப்பந்தம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ‘சண்டக்கோழி’ படத்தில் விஷாலின் அப்பாவாக ராஜ்கிரண் இப்படத்திலும் அதே வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விரைவில் நாயகி மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Comments

comments