MADHAVAN_2887842f

சமீபத்தில் தன்னுடைய திருமண நாளைக் கொண்டாடிய நடிகர் மாதவன், நான் இன்னும் போராடிக்கொண்டு இருக்கும் ஒரு நடிகன்தான் என்று கூறியுள்ளார்.

தன் 17-ம் ஆண்டு திருமண நாளைச் சமீபத்தில் கொண்டாடி இருக்கிறார் நடிகர் மாதவன். அதற்கு மாதவனின் ரசிகர் ஒருவர், லெஜண்டுக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று பதிவிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த மாதவன், ”உங்களுக்கு என்னுடைய நன்றிகள். நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் லெஜண்ட் இல்லை சகோதரா. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இன்னமும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு நடிகன்தான்” என்று கூறியுள்ளார்.

மேலும் மலைச் சிகரங்களில் நேரத்தைச் செலவிடுவதைக் காட்டிலும், 25 ஆண்டுகால நட்பும் 17 வருட மண வாழ்க்கையும் இந்த விழாவை அதிகம் சிறப்பித்துள்ளதாக மாதவன் கூறியுள்ளார்.

மாதவனும் அவருடைய மனைவி சரிதாவும் தங்களுடைய திருமண நாள் விழாவை இமய மலையில் கொண்டாடியுள்ளனர்.

Comments

comments