FB_IMG_1465840460754

ரெட் என்ற பெயரில் மற்றவர்களின் தொழிலை முடக்கும் காரியத்தை சட்டவிரோதமாக திரைப்படத்துறையில் சிலர் செய்து வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்புவரை, தயாரிப்பாளர்களை மிரட்ட விநியோகஸ்தர்கள் பயன்படுத்தி வந்த இந்த ஆயுதத்தை சமீபகாலமாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் கையில் எடுத்துள்ளனர்.

குறிப்பாக, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளரான பன்னீர் செல்வம் (கோயம்பேடு ரோகிணி தியேட்டர் அதிபர்) தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களை மட்டுமின்றி, சக திரையரங்கு உரிமையாளர்களையும் ரெட் ஆயுதத்தினால் மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதுமட்டுமல்ல, திரையரங்குகளில் பல்வேறு முறைகேடுகளிலும் ஈடுபடுவதாக பன்னீர் செல்வத்தின் மீது, தமிழக முதல்வரின் தனிப்பிரிவிலும், உள்துறை செயலாளரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்துறையில் கட்டப்பஞ்சாயத்துகளில் நடவடிக்கை எடுத்து, பிரச்சினைகள் தீர்க்கும் குழுவை அமைக்க வேண்டும் என சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் செயலாளர் சத்யசீலன் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார்.

theatre-association

“திரைப்படம் வெளிவந்து ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் ஓடுகிறது.

ரசிகர்கள் முதல் நாளில் படத்தை பார்க்க விரும்புவதால் சில திரையங்குகளில் உரிமையாளர்கள் டிஎன்சிஆர் சட்டம் மற்றும் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதல் விலைக்கு கட்டணம் பொதுமக்களிடம் வசூலித்து சட்ட விரோத செயலை செய்கின்றனர்.

இதன் மூலம் வருவாய் கிடைப்பதால் திரைப்பட விநியோகஸ்தருடன் ஓப்பந்தம் செய்யும் போது தமக்கு அருகில் உள்ள திரையரங்கு மற்றும் அருகில் உள்ள ஊர்களில் கொடுக்க வேண்டாம் என கூறி திரையங்கு தொகையை கொடுப்பதால் பல திரையரங்குகளில் திரையிடாமல் தங்கள் தியேட்டர்களில் மட்டும் வெளியிடுகின்றனர்.

திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நான்கைந்து நபர்கள் ஒன்று கூடி கூட்டாக தங்களை அனுசரித்து போகாத தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தரின் படங்களை திரையிட மாட்டோம் என பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி மூலம் தெரிவித்து ஒரு கணிசமாக தொகையை வசூல் செய்கின்றனர்.

படம் திரையிட்டு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதால் நடிகர் மற்றும் தயாரிப்பாளர்களை அடுத்த படம் வெளியிடமாட்டோம் என மிரட்டி வசூல் செய்கின்றனர்.

நடிகர் ரஜினி முதல் பல நடிகர்களிடம் கோடிக்கணக்கில் இப்படி வசூல் செய்துள்ளதோடு, சர்விஸ் சார்ஜ் என்ற பெயரில் 15 முதல் 20 சதவிகிதம் வரை அவர்களே எடுத்துக்கொள்கின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செங்கல்பட்டு ஏரியா விநியோக உரிமையை அடிமாட்டு வாங்கி பினாமிகளை உருவாக்கியுள்ளனர்.

இவர்களின் தடையால் கடந்த ஜூன் 3 முதல் 10 திரையங்குகள் மூடப்பட்டுள்ளன.

ஆகவே தமிழக அரசு தலையிட்டு தீர்வு குழு மூலம் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்.”
என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர்,

பன்னீர்செல்வம் தரப்பினர் மீது இப்பயொரு புகார் அளிக்க என்ன காரணம்?

தாணு மீது உள்ள தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக தெறி படத்தை வெளியிட முடியாத அளவுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார் பன்னீர் செல்வம்.

அதையும் மீறி செங்கல்பட்டு ஏரியாவில் உள்ள 11 தியேட்டர்கள் தெறி படத்தை திரையிட்டன. தற்போது அந்த தியேட்டர்களை பழிவாங்கும் வகையில் அவற்றுக்கு ரெட் போட்டிருக்கிறார் பன்னீர்செல்வம்.

இதனால் விரைவில் வெளியாக உள்ள கபாலி உட்பட எந்தப்படத்தையும் திரையிட முடியாதநிலைக்கு அந்தத் தியேட்டர்கள் தள்ளடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தியேட்டர் அதிபரும் 2 லட்சம் கொடுத்தால் ரெட் விலக்கிக் கொள்ளப்படும் என்று சொல்லி பணம் கேட்டு மிரட்டுகிறாராம்.

இதன் காரணமாகவே தியேட்டர் அதிபர்கள் கொந்தளித்துள்ளனர்.

பன்னீர்செல்வத்தின் தடையை மீறி தெறி படத்தை திரையிட்டதால் தற்போது சிக்கலுக்குள்ளாகி இருக்கும் 11 தியேட்டர்களுக்கும் கலைப்புலி தாணு கபாலி படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பன்னீர்செல்வத்தால் பாதிக்கப்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் முன் வைக்கின்றனர்.

காப்பாற்றுவாரா கபாலி?

Comments

comments