14-15-22-simbu

‘இது நம்ம ஆளு’ படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் சிம்பு, ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிக்க போவதாக கூறுப்படுகிறது. இதனால் அவருக்கு மேக்கப் போடுவதற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட்டை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர் படக்குழுவினர்.

மேலும் சிம்புவுக்கு ஜோடியாக 3 ஹீரோயின்கள் நடிக்க இருக்கிறார்கள். சிம்புவுடன் நடிக்கவிருக்கும் நடிகைகள், நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பை ஜூலை 2வது வாரத்தில் மைசூரில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. இப்படம் மூலம் 5 வருடங்களுக்குப் பின் மீண்டும் சிம்பு படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. அவரது இசையில் 9 பாடல்களைப் பதிவு செய்யப் போவதாகவும், அதில் ஒரு பாடல் பதிவு முடிந்து விட்டதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் சிம்பு நடிக்கும் மூன்று கெட்டப்புகளில் ஒரு கெட்டப்பின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அந்த கெட்டப்பிற்கு சிம்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதுடன் ஷேர் செய்து கொண்டாடியும் வருகின்றனர்.

Comments

comments