14-19-12-சமந்தா-மதுரை-கடை-திறப்பு-விழா

அண்மையில் தனியார் நிறுவனம் அழகு கடை ஒன்றை திறப்பதற்காக மதுரை சென்றிருந்தார் நடிகை சமந்தா. அவர் வருவதையறிந்த ரசிகர்கள் ஏராளமாக அங்கு குவிந்தனர். சமந்தா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இருந்தும் அதிக அளவில் மக்கள் மேடையை நோக்கி முன்னேறியதால் மேடை தகர்ந்தது.

நிலைமை மோசமாவதை உணர்ந்த சமந்தா மீண்டும் காரினுள் ஏறிச்செல்ல முயன்றிருக்கிறார். இதனால் கோபம் அடைந்த ரசிகர்கள் அவர் திரும்பிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சமந்தாவின் கார் டயரைக் குத்திக்கிழித்து பஞ்சராக்கியுள்ளனர்.

14-20-17-samantha-1

 

அதோடு சமந்தாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஒலி பெருக்கி கருவிகள் சரிந்தன. இதனால் பதட்டமடைந்த சமந்தாவை பாதுகாவலர்கள் மீட்டு மாடிக்கு கொண்டு சென்ற நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர்.

 

14-20-23-samantha

பின் மாற்றுக் காரில் சமந்தா அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமாகவே காணப்பட்டது.

Comments

comments