20-35-13-Amma-Kanakku-movie-stills-low-Stills-038-740x431@2x

ராஜா கைய வச்சால் ராங்காப்போனதில்லை  என்ற அபூர்வ சகோதர்கள் படத்தின் பாடலை மாற்றிப் பாட வேண்டிய தருணம் இது.

தனுஷ்  கைய வச்சால் ராங்காப்போனதில்லை  என்று பாட வேண்டும்.

அந்தளவுக்கு, தனுஷ் கையை வைத்ததெல்லாம் வெற்றிதான்.

கமர்ஷியல் என்கிற வணிக சினிமா மட்டுமல்ல காக்கா முட்டை, விசாரணை போன்ற கலைப்படப்புகளும் தனுஷுக்கு வெற்றியைக் கொடுத்திருக்கின்றன.

லாபத்தை மட்டுமின்றி, ஒரு தயாரிப்பாளராக மிகப்பெரிய மரியாதையையும் அவருக்கு தேடிக் கொடுத்திருக்கின்றன.

காக்கா முட்டை, விசாரணை படங்களின் வரிசையில் தனுஷின் அடுத்த படைப்பு – அம்மா கணக்கு.

தமிழ்சினிமாவில் எத்தனையோ அம்மா சென்ட்டிமெண்ட் படங்கள் வெளிவந்திருக்கின்றன.

அவை எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான அம்மா சினிமா இது.

இந்தப் படத்தில் அமலா பால் மிகச்சிறந்த நடிகையாய் வெளிப்பட்டிருக்கிறார்.

‘நில் பட்டே சன்னட்டா’ என்ற ஹிந்திப் படத்தின் ரீமேக் இது.

ஹிந்திப் படத்தை இயக்கிய அஸ்வினி அய்யர் திவாரியே அம்மா கணக்கு படத்தையும் இயக்கியுள்ளார்.

தரமான வெற்றிப்படங்களை தயாரிக்கும் நிறுவனம் என பெயர் பெற்றிருக்கும் தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ், இந்திப்பட இயக்குனர் ஆனந்த் எல் ராயின் படநிறுவனமான  கலர் எல்லோ புரொடக்சன்ஸ் உடன் இணைந்து  ‘அம்மா கணக்கு’ படத்தை தயாரித்துள்ளது.

இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் அமலா பால், சமுத்திரக்கனி, யுவா, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ஜூன் 24 ஆம் தேதி அன்று உலகெங்கும் திரைக்கு வருகிறது அம்மா கணக்கு.

தமிழகத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம்  வெளியாகிறது.

தமிழ்திரையுலகின் மாபெரும் சாதனைப் படங்களான ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ ஆகிய படங்களும் கூட 200 திரையரங்குகளில்தான் முதலில் வெளியாயின.

அந்த வெற்றி சென்ட்டிமெண்ட் அம்மா கணக்கு படத்துக்கும் வொர்க் அவுட்டாகும் என்று நம்பலாம்.

Comments

comments