IMG-20160604-WA0000
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் ‘கபாலி’ படம் அடுத்த மாதம் பிரமாண்டமாக ரிலீஸாக இருக்கிறது. முன்னதாக இப்படத்தின் இசைவெளியீட்டை வரும் ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த போவதில்லையாம்.

கபாலி இசை வெளியீட்டு விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கம் அல்லது ஒய் எம் சி ஏ வளாகம், குறைந்தபட்சம் சத்யம் திரையரங்கிலாவது நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அதற்கெல்லாம் மாறான ஒரு முடிவை எடுத்துள்ளாராம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. அதாவது எந்த நிகழ்ச்சியும் நடத்தாமல், அமைதியாக ஆன்லைனிலேயே கபாலி பாடல்களை வெளியிட்டு விடலாம் என்பதே அவரின் திட்டமாம்.

கபாலியின் டீஸர் வெளியீடும் எந்த நிகழ்ச்சியும் இல்லாமல் அமைதியாக யு-டியூபில் வெளியாகி உலக சாதனைப் படைத்தது. அதே போல இசை வெளியீட்டையும் வைத்துக் கொள்ளலாம் என்று அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Comments

comments