15-11-38-dhanush-nayanthara

சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற 63வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் நயன்தாராவிற்கு சில தர்மசங்கடங்கள் நடந்தேறியுள்ளது. அதாவது இந்த விழாவில் மம்முட்டைய பார்த்த நயன்தாரா தன் கையை கொடுக்க வர, அதை கண்டுகொள்ளாமல் புறகணித்துவிட்டார் மம்முட்டி. இது ஒருபுறம் இருக்க, அதே விழாவில் தனுஷின் செயலாலும் காயமடைந்துள்ளாராம் நயன்தாரா… இதை விழா மேடையிலேயே சொல்லியும் விட்டார் நயன்தாரா. விஷயம் இதுதான்..

தனுஷ் தயாரித்த ‘காக்கா முட்டை’ படம் சிறந்த படமாக தேர்வானதால் அந்த விருதை பெறுவதற்காக தனுஷ் மேடையேறினார். மேலும் காக்கா முட்டை படம் பற்றியும் அந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு பற்றியும் புகழ்ந்து பேசியுள்ளார்.

அதேசமயம் அவர் தயாரித்த இன்னொரு படமான நானும் ரெளடி தான் படத்தில் நடித்ததற்காக நயன்தாராவிற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. ஆனால் நயன்தாராவை பற்றி அவர் எந்த இடத்திலும் குறிப்பிடவும் இல்லை.. பாராட்டவும் இல்லையாம்.. காரணம் நானும் ரெளடி தான் படப்பிடிப்பின் போது நடந்த சில கசப்பான சம்பவங்கள் தான்… அதனால் தான் தனுஷ் நயன்தாராவை பற்றியோ, விக்னேஷ் சிவனை பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லையாம்.

இதனை உணர்ந்த நயன்தாரா, தான் மேடையேறி விருது வாங்கும்போது, “தனுஷ் என்னை பற்றி எதுவும் பேசவில்லை.. ஒருவேளை அவருக்கு என் நடிப்பு பிடிக்கவிலையோ என்னவோ.. ஐயாம் ஸாரி தனுஷ்” என வருத்ததுடன் கூறினார். மேலும் அந்த கணத்தில் தனுஷை கொஞ்சம் காயப்படுத்தலாம் என நயன்தாரா நினைத்தாரா என்று தெரியவில்லை, இந்த விருதை நான் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு சமர்ப்பிக்கிறேன்” என தனது காதலரை உயர்த்தி பிடித்து பேசியுள்ளார்.

Comments

comments