NTLRG_20160611120913750538

சூர்யா, சமந்தா, நித்யாமேனன், நடித்துள்ள ’24’ படம் கடந்த மாதம் வெளியானது. உலகம் முழுவதும் சுமார் ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. படம் இதுவரை 73 கோடியே 8 லட்சம் வசூல் செய்துள்ளது. இது ஒரு டைம் டிராவலை மையமாக கொண்ட சயின்ஸ் பிக்சன் படம். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டது.

தற்போது சூர்யா பங்குதாரராக உள்ள ‘ஹீரோ டாக்கீஸ் டாட் காம்’ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 1080பி எச்டி மற்றும் 5.1 சவுண்ட்டில் இதனை கட்டணம் செலுத்தி டவுண்லோட் செய்து பார்க்கலாம். இணையதளத்தில் வெளியாகி உள்ளதால் உலகம் முழுவதும் உள்ள சூர்யா ரசிகர்கள் படத்தை கண்டுகளிக்கலாம்.

 

Comments

comments