str

தற்போது ‘இது நம்ம ஆளு’ படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கிறார் சிம்பு. இப்படத்தை அடுத்து அவருடைய நடிப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் வெளிவர உள்ளது. இந்த நிலையில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சிம்பு.

அது என்னவென்றால் நடிகர் சிம்பு அஜித்தின் தீவிரமான ரசிகர் என்று எல்லோருக்கும்தெரியும். தான் நடிக்கும் படங்களில் அஜித்தை போன்று ஒரு காட்சிலாவது நடித்தால் தான் அவருக்கு தூக்கம் வரும். அப்படியிருக்கு அஜித் நடித்த முழு நீள படத்தில் சிம்பு நடித்தால் எப்படி இருக்கும், அதுதான் தற்போது நடக்க போகிறது.

அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா’ படத்தை ரீமேக் செய்து அதில் நடித்தே தீருவேன் என்று தெரிவித்துள்ளார் சிம்பு. ‘இது நம்ம ஆளு’ வெற்றியால் ரசிகர்களுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து வரும் போது இதை தெரிவித்துள்ளார் சிம்பு. மேலும் அவர் கூறுகையில், அஜித் நடித்த பில்லா படத்தை ரீமேக் செய்து நடிப்பதாகவும், அடுத்த வருடம் இறுதில் இதன் படப்பிடிப்பை தொடங்கி 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகம் கூறினார்.

பில்லா படம் 1980ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்து பெரிய ஹிட்டான படம். அதன் ரீமேக்கில் அஜித் நடித்து, இப்போது சிம்பு இரண்டாவது முறையாக இந்த் படத்தை ரீமேக் செய்யவுள்ளார்.

Comments

comments