0 (1)

நயன்தாரா நடிப்பில் தற்போது ஏகப்பட்ட படங்கள் தயாராகிவருகின்றன. இதில் ஒரு தெலுங்கு படமும் உண்டு. படத்திற்கு படம் தனது சம்பளத்தை ஏற்றிக்கொண்டே போகும் நயன்தாராவிடம் தற்போது பல மாற்றங்கள் தெரிகிறதாம். முன்பெல்லாம் படப்பிடிப்பு தளங்களில் அமைதியாகவே இருப்பாராம் நயன்தாரா.

லன்ச் நேரங்களில் நடிகர் நடிகைகள் ஜாலியாக அமர்ந்து அரட்டையடிக்க இவர் மட்டும் கேரவனுக்குள்ளேயே அமர்ந்து தனிமையாக இருப்பாராம். ஆனால் தற்போது நயன்தாராவிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாம். தனி ஒருவன், நானும் ரவுடிதான், மாயா என தொடர் வெற்றிகள் நயன்தாராவை உற்சாக மனநிலைக்கு மாற்றிவிட்டதாம்.

அதனால், திடீரென அவரும் மற்ற நடிகைகள் போல் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அரட்டையடிக்க ஆரம்பித்திருக்கிறாராம். தன்னுடன் நடிப்பவர்களுடன் சகஜமாக பேசத் தொடங்கியதுடன், தனது வேலை முடிந்ததும் அஜித் பாணியில் கேமரா அருகில் ஒரு சேர் போட்டு மற்றவர்கள் நடிப்பதை வேடிக்கைப்பார்த்து கைதட்டி ஆரவாரம் செய்கிறாராம். இதற்கு முன்பு தனது ஷாட் முடிந்ததும் கேரவனுக்குள் ஓடிவிடுவாராம் நயன்தாரா.

நயன்தாராவின் இந்த மாற்றங்கள் சினிமா வட்டாரத்தை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஆக, அஜித் பாணியில், தான் நடிக்கும் படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பஙகேற்பதில்லை என்பதை கடைபிடித்து வரும் நயன்தாரா, இப்போது அவரை மாதிரியே மற்றவர்கள் நடிப்பதை வேடிக்கை பார்க்கும் இன்னொரு அஜித் கொள்கையையும் கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த கொள்கைகள் எல்லாம் அஜித்துடன் நடிக்கும் போது அவரை பார்த்து கற்றுக்கொண்டது தான் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Comments

comments