20-30-48-filmfare-awards

தென்னிந்திய திரைப்பட விருதுகளில் கௌரவமான விருதாகக் கருதப்படுவது –  ஃபிலிம்ஃபேர் ஆங்கிலப்பத்திரிகை வழங்கி வரும் விருதுதான்.

63ஆவது  ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

நடிகைகள் எமி ஜாக்சன், ரகுல் ப்ரீத் சிங், கேத்ரின் தெரஸா, ப்ரணிதா, ரீமா கல்லிங்கல், அபர்ணா வினோத் ஆகியோர் நடனமாடிய கலைநிகழ்ச்சிகளுக்கு நடுவே, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கான  ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ் திரைப்படங்களுக்கான விருதுப் பட்டியல்….

1. சிறந்த அறிமுக நடிகர் : ஜி.வி.பிரகாஷ்குமார் (டார்லிங்)

2. சிறந்த நடிகர் (நடுவர் சிறப்பு விருது) : ஜெயம் ரவி (தனி ஒருவன்)

3. சிறந்த நடிகை (நடுவர் சிறப்பு விருது) : ஜோதிகா (36 வயதினிலே)

4. சிறந்த படம் : காக்கா முட்டை

5. சிறந்த இயக்குநர் : மோகன் ராஜா (தனி ஒருவன்)

6. சிறந்த நடிகர் : விக்ரம் (ஐ)

7. சிறந்த நடிகை : நயன்தாரா (நானும் ரௌடிதான்)

8. சிறந்த துணை நடிகர் : அர்விந்த் சாமி (தனி ஒருவன்)

9. சிறந்த துணை நடிகை : ராதிகா சரத்குமார் (தங்க மகன்)

10. சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான் (ஐ)

11. சிறந்த பாடலாசிரியர் : மதன் கார்க்கி (‘ஐ’ படத்திலிருந்து – பூக்களே… )

12. சிறந்த பாடகர் : சித் ஸ்ரீராம் (‘ஐ’ படத்திலிருந்து – என்னோடு…)

13. சிறந்த பாடகி : ஷ்வேதா மோகன் (‘தங்க மகன்’ படத்திலிருந்து – என்ன சொல்ல…)

தமிழ்த்திரைப்படப் பிரிவில் வழங்கப்பட்ட விருதகளில் அதிகபட்சமாக, ‘ஐ’ திரைப்படம் 4 விருதுகளை வென்றது.

‘தனி ஒருவன்’ திரைப்படம் 3 விருதுகளை வென்றது.

‘ஐ’ படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசைமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டது.

இது  ஏ.ஆர்.ரஹ்மான்  பெற்ற 30ஆவது ஃபிலிம்ஃபேர் விருது.

ஹிந்தி படங்களுக்கு 14 விருதுகளையும், தமிழ் படங்களுக்கு 14 விருதுகளையும், தெலுங்கு படத்திற்கு 1 விருது, சிறப்பு விருது ஒன்று என அவர் மொத்தம் 30 விருதுகளை பெற்றுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் ஃபிலிம்ஃபேர் விருதுகள் அறிவிக்கப்படும்போதெல்லாம், ஒருதலைபட்சமாக வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படுவதாக விமர்சனம் எழும்.

இந்த வருடமும் அதேபோன்ற விமர்சனமும், கண்டனமும் ஃபிலிம்ஃபேர் விருதுகள் பற்றி எழுந்துள்ளது.

Comments

comments