Marudhu-press-meet-Stills-015-740x431@2x

கதகளி படத்தை அடுத்து விஷால் நடித்த படம் – மருது.

‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’  படங்களை இயக்கிய முத்தையா இயக்கும் ‘மருது’ படத்தை ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ சார்பில் மதுரை அன்புச்செழியன் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக  அதாவது கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.

இவர்களுடன் சூரி, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கும் மருது படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

டி.இமான் இசை அமைத்துள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் விஷால்…

‘‘தமிழில் ‘மருது’ என்ற பெயரில் வெளியாகும் இந்தப்படம், தெலுங்கில் ‘ராயுடு’ என்ற பெயரில் வெளியாகிறது.
இம்மாதம் 20-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

நான் நடித்த ‘சண்டைக்கோழி’ படம் இன்றும் கூட கிராமத்து திருவிழா சமயங்களில் கிராமங்களில் திரையிடப்படுவதாக விநியோகஸ்தர்கள் சொல்லுவார்கள்.
அதைபோல இந்த ‘மருது’ படம் என்னை தமிழ்நாட்டின் குக்கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கும் படமாக இருக்கும்.

அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பது போன்ற ஒரு கதாபாத்திரத்தை இந்தப்படத்தில் எனக்கு தந்துள்ளார் இயக்குநர் முத்தையா.

நான்இதுவரை எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் அவன் இவன் போன்ற ஒரு சில படங்களில்தான் 100 சதவிகித இன்வால்வ்மெண்ட் உடன் நடித்திருக்கிறேன். சில படங்களில் நடிக்கும்போது.. இந்த ஷாட் சரியில்லை ரீடேக் போகலாம் என்று சொல்வார்கள். இதை எல்லாம் யாரு கவனிக்கப்போறாங்க.. விடுங்க பாஸ் என்று சொல்லிவிடுவேன்.

‘அவன் இவன்’ படத்திற்குப் பிறகு என்னை முழுமையாக அர்ப்பணித்தது மட்டுமல்ல 100 சதவிகித இன்வால்வ்மெண்ட் உடன் நடித்த படம் இது.

சூரியை ஒரு காமெடியனாகத்தான் எல்லோருக்கும் தெரியும். இந்தப்படம் மூலம் சிறந்த குணசித்திர நடிகராகவும் வலம் வருவார் சூரி.

பொதுவாக வில்லன் கேரக்டர் பவர்ஃபுல்லாக இருந்தால்தான் எனக்குப் பிடிக்கும். அப்போதுதான் ஹீரோ கேரக்டர் இன்னும் பவர்ஃபுல்லாக இருக்கும். இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ள ஆர்.கே. சுரேஷ்வெறித்தனமாக நடித்துள்ளார். க்ளைமேக்ஸ் காட்சியில் அவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்படும்.

ஸ்ரீதிவ்யாவுடன் நான் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் படம் இது. ”

என்ற விஷால், மருது படத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாகவோ என்னவோ, இயக்குனர் முத்தையா அடுத்து இயக்கும் படத்தை தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரிக்கு இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கதாநாயகன் யாராக இருந்தாலும்  சரி… முத்தையாவின் படத்தை படத்தை எங்களது பட நிறுவனம்தான் தயாரிக்கும் என்றார்.

மருது படத்தைப் பற்றி பேசிக்கொண்டே வந்த விஷால், தனக்குப் பிடித்தமான சப்ஜெக்ட்டுக்கு மாறினார்…

“திருட்டு விசிடியை தடுக்க நான் ஒருவன்தான் இன்றுவரை தனியாளாக போராடிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய படத்திற்காக மட்டுமல்ல, எல்லா நடிகர்களுக்காகவும்தான் நான் போராடுகிறேன், பேசுகிறேன். இம்மாதம் 20 ஆம் தேதி ‘மருது’ படம் வெளியாகிறது. கண்டிப்பாக திருட்டு விசிடி வெளியிடுவார்கள். லேபிள்கள் எல்லாம் ரெடி பண்ணிள வைத்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். நான் அவர்களை விட மாட்டேன். ரசிகர்களாகியஎன் நண்பர்களுடன்  நிச்சயமாக களமிறங்குவேன்.

திருட்டு விசிடிகளைக் கண்டுபிடித்தால் அது எந்த தியேட்டரிலிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் கண்டுபிடித்து நிச்சயமாக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க செய்வேன். அதற்கு தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்… அப்புறம் பாருங்கள்…

நான் போராடுவதைப்போல எல்லோரும் ஒரு குழுவாக இணைந்தால் திருட்டு விசிடியை தடுக்க முடியும்’’ என்றார்.

தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தைக் குறைத்தால் திருட்டு விசிடியை தடுக்க முடியும். அதற்கு ஏதாவது செய்யுங்களே விஷால்…

Comments

comments