Muthina-Kathirika-Stills-009-740x431

இயக்குநர் சுந்தர்.சி யிடம் பல படங்களில், இணை இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர் வெங்கட் ராகவன்.

தன் சிஷ்யனை தானே இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார் சுந்தர்.சி.

தற்போது சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் ‘முத்தின கத்தரிக்கா’ படத்தின் இயக்குநர் வெங்கட் ராகவன்தான்.

முத்தின கத்தரிக்கா படம் பற்றியும், அதை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது பற்றியும் பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் வெங்கட் ராகவன்…

“நான் சுந்தர்.சி சாருடன் பல படங்களில் இணை இயக்குநராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளேன். அவர் நடித்த படங்களின் காட்சிகளையும் நான் இயக்கியிருக்கிறேன்.

சுந்தர்.சி சார் என்னிடம், சீக்கிரமே ஒரு படத்தை  இயக்குமாறு அறிவுறுத்திக் கொண்டே இருப்பார். படம் இயக்கலாம் என்று முடிவெடுத்தபின் அவரையே கதாநாயகனாக நடிக்குமாறு கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். அது மட்டுமல்ல, அவருடைய அவ்னி மூவிஸ் மூலமாக இந்தப் படத்தை அவரே தயாரிக்கிறார்.

தற்போது பேய்க்கதைகள், போலீஸ் கதைகள், காதல் கதைகள் என எல்லா ஜானர்களிலும் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வெளிவராத ஒரு ஜானரில் படம் இயக்கலாம் என யோசித்தபோது அரசியல் களத்தினை தேர்வு செய்தோம்.

மலையாளத்தில் வெளிவந்து’ சூப்பர் ஹிட்டான  “வெள்ளிமூங்கா” படத்தினை நானும்,சுந்தர்.சி சாரும் பார்த்தோம். இருவருக்கும் பிடித்திருந்தது. அதையே தமிழில் ரீமேக் செய்யலாம் என்று முடிவு செய்தோம்.

மலையாளப் படத்தினை முழுமையாக அப்படியே ரீமேக் செய்யாமல் அந்தப்படத்திலிருந்து ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப பல மாறுதல்கள் செய்து, அனைவருக்கும் பிடிக்கும் ஒரு படமாக  எடுத்திருக்கிறோம்.

அதாவது அந்தப்படத்திலிருந்து ஒரு கோடு மட்டும் எடுத்துக் கொண்டு நாங்கள் ஒரு ரோடு போட்டிருக்கிறோம்.

மலையாளப் படத்தின் இயக்குநர் இந்தப்படத்தினைப் பார்த்தால் இப்படி கூட எடுக்கலாமா?என்று யோசிக்கும் அளவிற்கு ‘முத்தின கத்திரிக்கா’ படத்தை  எடுத்துள்ளோம்.

நான் இயக்குனர் ஆவதற்கு முன்பே என்னிடம் ஒரு ஐடியா இருந்தது.

ஒரு மாடர்ன் பாக்யராஜ் மாதிரி என் படத்தில் எந்த ஒரு விஷயம் சொன்னாலும் அதில் ஒரு நகைச்சுவை இருக்க வேண்டும் என்பதுதான் அது.

அதை இந்தப் படம் முழுவதிலும் பயன்படுத்தி இருக்கிறேன்.

படத்தில் ஒரு அரசியல்வாதியின் இயல்பான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறோம். படத்தின் தலைப்பிலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ரொம்ப வருடங்கள் திருமணமாகாமல் பேச்சிலராக இருக்கும் இளைஞர்களைத் தான் ‘முத்தின கத்திரிக்கா’ என்று சொல்வார்கள்.

40 வயதான அரசியல்வாதி ஒருவர் அவர் வாழ்க்கையிலும் சரி,அரசியலிலும் சரி எதுவும் சாதிக்கமுடியாதநிலையில், ஒரு பெண் மூலமாக அவரது வாழ்வில் நடைபெறும் ஒரு நிகழ்வு அவரை, அரசியலில், சொந்த வாழ்க்கையில் எந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது என்பது தான் கதை.”

Comments

comments