kabali-rajinikanth-1

கபாலியின் கதை என்ன… என்பது குறித்து யாருக்கும் பெரிதாகத் தெரியாமல் இருந்தது. இப்போது இதுதான் கபாலி கதை என்று கூறி சிலர் ‘சில கதைகளை’ப் பரப்பி வருகின்றனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் இளமையாகவும் வயதானவராகவும் இரண்டு தோற்றங்களில் வருகிறார். அந்த தோற்றங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இளமைதோற்றம் 1980-களில் வந்த படங்களில் பார்த்த ரஜினியைப் போல் இருந்தது என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் கூறுகிறார்கள்.

வெளிநாடுகளுக்கு பிழைக்க சென்று சமூக விரோதிகள் பிடியில் சிக்கி அடிமைகளாக அல்லோலப்படும் தமிழர்களை வயதான தாதா ரஜினிகாந்த் எப்படி மீட்கிறார் என்பதே கதை என்று தகவல் பரவி உள்ளது.

இளமை காலத்தில் பெரிய டானாகத் திகழும் அவர், பிறகு அதில் இருந்து ஒதுங்கி ஏழைகளின் காவலனாக வாழ்கிறார். ஆனால் மலேசியாவில் தமிழர்கள் படும் கஷ்டத்தை பார்த்து மீண்டும் டானாக மாறி அவர்களை மீட்கிறார், வில்லன்களை அழிக்கிறார், என்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் பாடல்கள் வரும் மே இறுதி வாரத்தில் மலேசியாவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. ஜூன் இறுதியில் படம் வெளியாகக்கூடும்.

Comments

comments