Maruthu-Vishal-release-date

நடிகர் சங்கத் தேர்தலில் ஹீரோவாக இருந்தாலும் மக்கள் மத்தியில் இன்னமும் உச்சம் தொடாத நடிகராகவே இருக்கிறார் விஷால்.

அவர் கடைசியாக நடித்த கதகளி படம் கூட வசூலில் கல்லாவை நிரப்பவில்லை.

இந்நிலையில், விஷால் நடித்த மருது படம் தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் நேற்று வெளியானது.

இவற்றில் 125க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் அரங்கு நிறையவில்லை. இவற்றில் சென்னையில் உள்ள மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்களும் அடக்கம்.

மருது படம் மக்கள் மன்றத்தில் எடுபடாமல் போனதற்கு என்ன காரணம்?

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்தநாளே… அதாவது தேர்தல் பரபரப்பு அடங்குவதற்குள் மருது படத்தை ரிலீஸ் செய்ததை விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் காரணமாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

தேர்தல் ஃபீவர் குறையாத இந்த நேரத்தில் மருது படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்று ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறார்கள்.

அதையும் மீறி மருது படத்தை நேற்று வெளியிட்டுவிட்டனர்.

விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் பயந்ததுபோலவே தமிழகம் முழுக்க மருது படத்துக்கு ஓப்பனிங்கே இல்லாமல்போய்விட்டது.

மருது படத்துக்கு ஓப்பனிங் இல்லாமல் போனதற்கு இன்னொரு காரணம்… மருது படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கிய லைகா நிறுவனம்.

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து மருது படத்தை வாங்கும்போது இத்தனை கோடிக்கு பப்ளிசிட்டி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்ததாம் லைகா.

ஆனால் வாக்கு கொடுத்தபடி மருது படத்துக்கு பப்ளிசிட்டி செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டுவிட்டது.

படத்துக்கு பப்ளிசிட்டி இல்லாமல் போனதையும் மருது படத்தின் தோல்விக்கு காரணமாக சொல்கிறார்கள்.

Comments

comments