Vishal-Actor-Photo-001

சமீபகாலமாக திருட்டு விசிடி கும்பலை பிடிப்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறார் விஷால். தான் அவுட்டோர்களில் முகாமிட்டு நடித்து வரும்போது அந்த ஏரியாக்களில் திருட்டு விசிடிக்கள் விற்பனை செய்யப்பட்டாலோ அல்லது கேபிள் டிவிக்களில் புதிய படங்கள் ஒளிபரப்பப்பட்டாலோ உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை போலீசில் பிடித்துக்கொடுத்து நடவடிக்கை எடுத்து வரு கிறார். மேலும், விரைவில் தனது மருது படம் திரைக்கு வர இருப்பதால் திருட்டு விசிடி விற்பனையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தனது ரசிகர் படையை உஷார்படுத்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் பெங்களூரில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தில் விஜய் நடித்துள்ள தெறி படம் போடப் பட்டதாம். அதை அறிந்த விஷாலுக்கு தெரிந்த ஒருவர் அவருக்கு தெரியப்படுத் தினாராம். அதையடுத்து திருட்டு விசிடி தடுப்பு பிரிவு போலீசாருக்கு விஷால் தகவல் கொடுத்ததை அடுத்து பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டதோடு, அந்த பேருந்தில் இருந்து பல புதிய படங்களின் திருட்டு விசிடிக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாம்.

 

Comments

comments