NTLRG_160530085843000000

மத்திய திரைப்பட சென்சார் போர்டு ரிவைசிங் கமிட்டியில் உறுப்பினராக இருந்து வருபவர் நடிகர் எஸ்.வி.சேகர். அதன்காரணமாக தான் எந்த சினிமா மேடைகளில் ஏறினாலும், இந்த மாதிரி படங்கள் இயக்கினால் ரிலீஸ் நேரத்தில் உங்களுக்கு பிரச்சினை வராது என்று தனது சார்பில் அட்வைஸ் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் எஸ்.வி.சேகர். மேலும், திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிவிலக்கில் மாற்றம் செய்ய வேண்டும என்று அவர் ஒரு கருத்தினை முன்வைக்கிறார்.

அதுபற்றி எஸ்.வி.சேகர் கூறுகையில், பொதுவாக எல்லா படங்களுக்குமே வரிவிலக்கு என்கிற நிலையை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, 100 முதல் 150 தியேட்டர்களில் வெளியாகும் சின்ன படங்களுக்கு மட்டுமே வரி விலக்கு சலுகை தர வேண்டும். பெரிய பட்ஜெட் படங்களுக்கு இந்த சலுகை வழங்கத் தேவையில்லை. காரணம் 500 தியேட்டர்களுக்கு மேல் படங்களை வெளியிடுபவர் களுக்கு இந்த சலுகை தேவையில்லை. அவர்களும் இந்த சலுகையை எதிர்பார்ப்பதில்லை. ஆனால் குறைந்த தியேட்டர்களில் படங்களை வெளியிடுபவர்கள் பெரும்பாலும் நஷ்டமே அடைகிறார்கள். அதனால் சிறிய தயாரிப்பாளர்களின் படங்களுக்கு இந்த வரிச்சலுகையை கொடுத்தால் அவர்களுக்கு இது ஒரு லாபமாக இருக்கும் என்கிறார் எஸ்.வி.சேகர்.

 

Comments

comments